குரூப் - 2 எழுத்து தேர்வு 244 தேர்வர்கள் பங்கேற்பு
குரூப் - 2 எழுத்து தேர்வு 244 தேர்வர்கள் பங்கேற்பு
ADDED : மார் 14, 2026 05:52 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் நாளை நடைபெற உள்ள குரூப் -
2 மற் றும் 2ஏ தேர்வில், 244 பேர் பங்கேற்க உள்ளனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வு, நாளை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது. இத்தேர்வை, 244 பேர் எழுத உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்வையற்றோர் தேர்வு எழுத மாற்று நபர் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதியும் தேர்வு கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வருபவர்களுக்காக, போக்குவரத்து வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நேரம் முடிந்தும், கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
