/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'குரூப் - 4' தேர்வு 19,914 பேர் 'ஆப்சென்ட்'
/
'குரூப் - 4' தேர்வு 19,914 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : ஜூலை 12, 2025 11:52 PM

திருவள்ளூர்:திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நேற்று நடந்த 'குரூப் - 4' தேர்வில், 19,91௪ பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில், 126 மையங்களில் தேர்வு நடந்தது.
அனைத்து தேர்வு கூடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வை கண்காணிக்க, 126 தலைமை கண்காணிப்பாளர்கள், 39 இயக்க குழு அலுவலர்கள், துணை கலெக்டர் நிலையில் ஒன்பது பறக்கும் படை குழு மற்றும் 126 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 38,117 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 31,082 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள 7,035 பேர் தேர்வு எழுதவில்லை.
l அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 99 மையங்களில் தேர்வு நடந்தது. மாவட்டம் முழுதும், 27,394 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 22,721 பேர் தேர்வு எழுதினர். 4,673 பேர் தேர்வு எழுத வரவில்லை.
l செங்கல்பட்டு மாவட்டத்தில், 108 மையங்களில் தேர்வு நடந்தது. மாவட்டம் முழுதும் 37,818 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 29,612 பேர் தேர்வு எழுதினர். 8,206 பேர் தேர்வு எழுதவில்லை.
மூன்று மாவட்டங்களையும் சேர்த்து, மொத்தம் 19,914 பேர் தேர்வு எழுத வரவில்லை என, அம்மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்தனர்.

