/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குரூப்-2 எழுத்து தேர்வு 234 பேர் பங்கேற்பு
/
குரூப்-2 எழுத்து தேர்வு 234 பேர் பங்கேற்பு
ADDED : பிப் 08, 2025 09:11 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று நடந்த குரூப் - 2 எழுத்து தேர்வில், 234 பேர் பங்கேற்றனர்.
திருவள்ளூர், ஸ்ரீநிகேதன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- நடைபெற்றது. இந்த தேர்வை கலெக்டர் பிரதாப் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின் அவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2 தேர்வுக்கு 115 ஆண், 124 பெண் என, மொத்தம் 239 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
இதில், 234 பேர் தேர்வு எழுதினர். ஐந்து பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையத்தினை கண்காணிக்க, துணை கலெக்டர் அளவில் பார்வையாளர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளுர் தாசில்தார் ரஜினிகாந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.

