தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/காப்புக்காட்டில் வேட்டை; மூவர் கைது 2 துப்பாக்கிகள் பறிமுதல்

காப்புக்காட்டில் வேட்டை; மூவர் கைது 2 துப்பாக்கிகள் பறிமுதல்

காப்புக்காட்டில் வேட்டை; மூவர் கைது 2 துப்பாக்கிகள் பறிமுதல்


UPDATED : அக் 10, 2026 10:26 PM

ADDED : அக் 10, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 10:26 PM ADDED : அக் 10, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: காப்புக்காட்டில் வேட்டைக்குச் செல்ல நாட்டு துப்பாக்கிகளை எடுத்துச் சென்ற இருவர் மற்றும் துப்பாக்கிகளைத் தயாரித்துக் கொடுத்தவர் என, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.கே.பேட்டை போலீசார் நேற்று விடியங்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த, 'ஹீரோ ஸ்பிளெண்டர்' இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் வந்த இருவரிடம், உரிமம் இன்றி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் இருந்தன.

விசாரணையில், அவர்கள் விடியங்காடு காப்புக்காட்டில் வேட்டைக்குச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பீமாரெட்டியூரைச் சேர்ந்த லட்சுமிகாந்தன், 28, அரக்கோணம் அருகே மூதுாரைச் சேர்ந்த சங்கர், 35, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 68, என்பவர் துப்பாக்கிகளைத் தயாரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும் போலீசார் கைது செய்தனர். மூன்று பேரிடமிருந்து நாட்டு துப்பாக்கிகள் இரண்டு மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us