ADDED : பிப் 01, 2024 08:05 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்:திருவள்ளூர் வள்ளுவர்புரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், 67. இவர், சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, ஜன.,16ல் வேலைக்கு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது மகன் சுரேஷ் நேற்று கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
