/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி நீதிமன்ற வளாகம் நீதிபதி குழுவினர் ஆய்வு
/
கும்மிடி நீதிமன்ற வளாகம் நீதிபதி குழுவினர் ஆய்வு
ADDED : மார் 17, 2024 01:03 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலையில் உள்ள வாடகை கட்டடம் ஒன்றில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் பின்புறம், பெத்திக்குப்பம் கிராம சர்வே எண்: 297, 298க்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம் வகைப்பாடு கொண்ட நிலத்தில், 2.47 ஏக்கர், நீதிமன்ற வளாகம் அமைக்க ஒதுக்கப்பட்டது.
அந்த இடத்தில், மாவட்ட உரிமையியல், குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கக் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் நிறுவப்பட இருக்கிறது.
அந்த இடத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தலைமையிலான நீதிபதி குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர், வரைபடத்தை காண்பித்து விளக்கம் அளித்தனர். கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சம்பத், செயலர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

