/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டி இரண்டாக பிரிப்பு: மறுப்பு இருந்தால் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்

ADDED : டிச 16, 2025 04:36 AM
திருவள்ளூர்: ''கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து மறுசீரமைப்பு செய்வதற்கு மறுப்பு இருந்தால், அப்பகுதி மக்கள் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம், '' என, கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில், 410 குக்கிராமங்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காக அதை இரண்டாக பிரித்து, 39 ஊராட்சிகளை உள்ளடக்கி கும்மிடிப்பூண்டி ஒன்றியமாகவும், 22 ஊராட்சிகளை உள்ளடக்கி மாதர்பாக்கம் என்ற புதிய ஒன்றியத்தையும் உருவாக்கி, மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மறுசீரமைப்பு செய்வது குறித்து, அந்த ஊராட்சியில் வசிப்போர், அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்து, ஆறு வாரங்களுக்குள் மறுப்பை தெரிவிக்க விரும்பினால், எழுத்து மூலம் அரசுக்கு தெரிவிக்கலாம். இதை அரசு உரிய பரிசீலனை செய்யும்.
மறுப்புகள் ஏதும் இருப்பின், அதை எழுத்து மூலமாக, 'அரசு கூடுதல் தலைமைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை- - 600 009' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.