தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தேசிய வில் வித்தை போட்டி கும்மிடி மாணவி அசத்தல்

தேசிய வில் வித்தை போட்டி கும்மிடி மாணவி அசத்தல்

தேசிய வில் வித்தை போட்டி கும்மிடி மாணவி அசத்தல்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 08:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே நடந்த தேசிய வில் வித்தை போட்டியில், கும்மிடிப்பூண்டி மாணவி தங்கம் வென்றார்.

ஹரியானா மாநிலம், பானிப்பட் நகரில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, தேசிய அளவிலான வில் வித்தை போட்டிகள், கடந்த மாதம் 21ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தன.

இந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் தவுஷிகா தஸ்னீம், 15, என்ற மாணவி பங்கேற்றார்.

இதில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்ற அவர், தங்கப்பதக்கம் வென்றார். பயிற்சியாளர் கோகுல், சக மாணவ – மாணவியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us