ADDED : டிச 02, 2024 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு மகன் ஆகாஷ், 25 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் உதயா, 24. இருவரும் கடந்த 8 ம் தேதி அடிதடி வழக்கில் திருவள்ளூர் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவர் மீதும் பல்வேறு அடிதடி வழக்கு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்ஸ்பெக்டர் அந்தோணிஸ்டாலின் மாவட்ட எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்தார்.
எஸ்.பி., சீனிவாசபெருமாள் பரிந்துரைபடி கலெக்டர் பிரபுசங்கர், மேற்கண்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.