ADDED : பிப் 26, 2024 11:31 PM
அ நிறம் | அளவு
வேப்பேரி: குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு, தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
இருப்பினும் தடையை மீறி சிலர் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.அவ்வாறு விற்பனை செய்வோரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
ஏழு நாட்களில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த 72 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 59 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
