நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர எல்லையில், ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஒரு நபரை போலீசார் சந்தேகத்தின்படி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர், சோழவரம் அடுத்த, எருமைவெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, 70, என்பதும், அவரிடம் இருந்து, நாலரை கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.