நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் வி.எம்.நகர் பகுதியில் போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருவள்ளூர் நகர போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் பாண்டியன், 67 என்பவரது பெட்டி கடையில் சோதனை மேற்கொண்டனர்.
கடையில் இருந்த புகையிலை பொருட்களான 38 ஹான்ஸ், 62 கூல் லிப், 355 விமல் பான் மசாலா என மொத்தம் 455 பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 5 ஆயிரம் ரூபாய் என திருவள்ளூர் நகர போலீசார் தெரிவித்தனர்.
திருவள்ளூர் நகர போலீசார் பாண்டியனை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.