நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:சூளைமேனியில் குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி கிராமத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை செய்தனர்.
அங்குள்ள மளிகை கடையில் சோதனை செய்ததில், 40 பாக்கெட் குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தது. இது தொடர்பாக, கடையின் உரிமையாளர் ஆஷாராம், 42, என்பவரை கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.