ADDED : மார் 19, 2024 07:13 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள பெட்டி கடை மற்றும் டீக்கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் கொண்ட குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். தச்சூர் மற்றும் பெருவாயல் பகுதியில், சிவமுருகன், 39, ஜெயசந்திரன், 50, ஆகியோரது பெட்டி கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பாகெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இருவருக்கும் தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
