ADDED : அக் 23, 2024 07:40 PM
அ நிறம் | அளவு
திருத்தணி,:ஆந்திர மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் திருத்தணி பகுதிக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி, கே.ஜி.கண்டிகை பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டார்.
அப்போது, 'டி.வி.எஸ்., 50' இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின்படி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 4 கிலோ குட்கா இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3,000 ரூபாய்.
விசாரணையில், கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்த கிருஷ்ணநாயுடு, 86, என, தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
