ADDED : நவ 12, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனைமேற்கொண்டனர்.அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
பைக்கில் இருந்த பையை சோதனை செய்ததில், 92 பாக்கெட் குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது.
இதன் மதிப்பு, 4 ஆயிரம்ரூபாய். விசாரித்தில் விளாப்பாக்கம் நசுருதீன், 42 என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்தனர்.