ADDED : பிப் 16, 2024 07:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே வசந்தபஜார் சாலையில், போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயிலில் இருந்து சந்தேகம் ஏற்படும் வகையில் ஒருவர் இறங்கி சென்றார்.
அவரை போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் இருந்து, 6.5 கிலோ எடை குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அவர், கும்மிடிப்பூண்டி அருகே நங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த செந்தில், 45, என்பது தெரிந்தது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.