தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குட்கா கடத்தியவர் சிக்கினார்

குட்கா கடத்தியவர் சிக்கினார்

குட்கா கடத்தியவர் சிக்கினார்


UPDATED : செப் 15, 2026 09:54 PM

ADDED : செப் 15, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 09:54 PM ADDED : செப் 15, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாலங்காடு:ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி வழியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு, கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார், கடந்த நான்கு நாட்களுக்கு முன், திருவாலங்காடு - கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கிய போது, அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார்.

வாகனத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 7.5 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய சின்னம்மாபேட்டையை சேர்ந்த மல்லிகா அர்ஜுனா, 45, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us