/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் மது விற்ற மாற்றுத்திறனாளி கைது
/
திருவாலங்காடில் மது விற்ற மாற்றுத்திறனாளி கைது
ADDED : டிச 23, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் ஊராட்சி ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 45. மாற்றுத்திறனாளியான இவர், டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்று வந்துள்ளார்.
இதுகுறித்து, திருவாலங்காடு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று காலை, அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 57 மதுபாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள் ஹான்ஸ் 500 கிராமை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, சந்திரசேகரை கைது செய்து, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.