ADDED : டிச 21, 2024 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல், சக்திவேல் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் குப்புசாமி, 46. புழல் காந்தி பிரதான சாலையில், ஆவின் பாலகம் நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலையில் ஆவின் பாலகத்தை திறக்க வந்தபோது, ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்த நிலையில் இருந்தது.
அதனால், அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவிலிருந்து, 8,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்த புகாரின்படி, புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.