/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜல்லிகள் பெயர்ந்த தார்ச்சாலையால் அவஸ்தை 3 ஆண்டாக கண்ணுக்கு தெரியவில்லையா ஆபீசர்ஸ்?

ADDED : ஜூலை 07, 2025 11:12 PM

திருவாலங்காடு,  பனப்பாக்கத்தில்  ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் பனப்பாக்கம் ஊராட்சியில் இருந்து, கனகம்மாசத்திரம் செல்லும் தார்ச்சாலை  மூன்றாண்டுகளாக ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளது.
இந்த சாலை வழியாக பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கனகம்மாசத்திரம், திருவாலங்காடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, கனகம்மாசத்திரம் பகுதிவாசிகள் விவசாய நிலங்களுக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தார்ச்சாலை பெயர்ந்து, ஜல்லிக் கற்கள் சிதறிக் கிடக்கின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மூன்று ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.