/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் கனமழையால் ஓட்டு வீடுகள் சேதம்
/
திருவாலங்காடில் கனமழையால் ஓட்டு வீடுகள் சேதம்
ADDED : நவ 30, 2024 11:58 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னகளக்காட்டூரில் உள்ள மேட்டுத்தெருவில், மலர்விழி என்பவரது ஓட்டு வீட்டின் கூரையும், திருவாலங்காடு பெரிய தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது ஓட்டு வீட்டின் கூரை உடைந்து விழுந்ன.
இதனால், மழைநீர் வீட்டிற்குள் தேங்கியதுடன், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. கூரை விழுந்த போது, அதிர்ஷ்டவசமாக வீட்டில் வசிப்பவர்கள் மற்றொரு அறையில் இருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சின்னம்மாபேட்டை பஜாரில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால், கழிவுநீருடன் மழைநீர் தேங்கி கடைகளுக்குள் வருவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி சார்பில், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அடைப்பு சரிசெய்யப்பட்டது.

