/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையோர மரத்தில் சிக்கிய கனரக லாரி
/
நெடுஞ்சாலையோர மரத்தில் சிக்கிய கனரக லாரி
ADDED : ஜன 09, 2025 02:28 AM

கடம்பத்துார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து, கனரக வாகனம் ஓன்று, நேற்று, காலை 8:00 மணியளவில், பொருட்களை ஏற்றிக் கொண்டு உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட செங்காடு பகுதியில் நெடுஞ்சாலையோர மரக்கிளையில் கனரக லாரி விபத்தில் சிக்கியது.
இதையடுத்து, லாரியில் கொண்டு செல்லப்பட்ட அதிக எடை கொண்ட பொருட்கள் சாலையில் சிதறி விழுந்தன. இதனால அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணவாள நகர் போலீசார் அளித்த தகவலையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கனரக லாரி மற்றும் சாலையில் சிதறிக் கிடந்த பொருட்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
மேலும், ஸ்ரீபெரும்புதுாரிலிருந்து வரும் வாகனங்களை காட்டு கூட்டு ரோடு பகுதியில், மண்ணுார், அரண்வாயல்குப்பம் வழியாக, திருவள்ளூருக்கு, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் திருப்பி விட்டனர்.
இதேபோல, திருவள்ளூரிலிருந்து வரும் வாகனங்களை, மேல்நல்லாத்துார், மப்பேடு வழியாக, ஸ்ரீபெரும்புதுாருக்கு, மணவாளநகர் போலீசார் திருப்பி விட்டனர்.
இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.