தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உயர்கோபுர மின்விளக்கு சேதம்

 உயர்கோபுர மின்விளக்கு சேதம்

 உயர்கோபுர மின்விளக்கு சேதம்


ADDED : ஏப் 07, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு:முத்துக்கொண்டாபுரம் உயர்மட்ட பாலத்தில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு, கம்பத்துடன் சாய்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

கனகம்மாசத்திரம் ----- திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையில், முத்துக்கொண்டாபுரம் கிராமம் உள்ளது. இங்கு பாயும் கொசஸ்தலையாற்றை வாகன ஓட்டிகள் கடக்க 2021ல், 14.73 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. வாகன ஓட்டிகள் இரவில் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் பாலத்தின் இருபுறமும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கனகம்மாசத்திரத்தில் இருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு முறிந்து சாய்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பாலத்தை கடந்து செல்கின்றனர். மேலும் உயர்கோபுர மின்விளக்கு சாய்ந்து 4 மாதங்கள் ஆகின்றன. இதுகுறித்து மின்வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us