தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உயர் கோபுர மின்விளக்கு திருட்டு

உயர் கோபுர மின்விளக்கு திருட்டு

உயர் கோபுர மின்விளக்கு திருட்டு


UPDATED : ஜூன் 16, 2026 05:44 PM

ADDED : ஜூன் 16, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 05:44 PM ADDED : ஜூன் 16, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை:நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் உயர்கோபுர மின் விளக்கு, பயன்பாட்டிற்கு வரும் முன்பே திருடப்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், நாதன்குளம் எதிரே உள்ள சாலை திருப்பத்தில், அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டன. அதனால், தேசிய சாலை பாதுகாப்பு குழுவின் ஆய்வின்படி, இந்த பகுதியில் வேகத்தடை, சாலையோர மோதல் உருளைகள் அமைக்கப்பட்டன.

அதை தொடர்ந்து, இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு பொருத்தும் பணி, கடந்த நான்கு மாதங்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தின் கீழ் பகுதியில், மேலே பொருத்துவதற்காக இணைத்து வைத்திருந்த மின்விளக்கு, நேற்று மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இது குறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us