/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம்
/
சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம்
ADDED : ஜன 22, 2026 06:40 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை மின் வாரிய அலுவலகம் அருகே, மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், மேம்பாலம் செல்லும் சந்திப்பில் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, இச்சாலை வழியாக தின மும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
இந்த சந்திப்பில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இச்சந்திப்பில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, ஊத்துக் கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், மின்வாரிய அலுவலக சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண் டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

