ADDED : மார் 06, 2026 05:52 AM

அ நிறம் | அளவு
திருமழிசை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 2018ல் இருந்து சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் திருமழிசை, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், செட்டிபேடு உள்ளிட்ட பகுதிகளில் இணைப்பு சாலை பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. மேலும், இந்த இணைப்பு சாலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் கிடப்பில் போடப் பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர், இணைப்பு சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
