/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகளுக்கு தள்ளுவண்டி வழங்கிய தோட்டக்கலை துறை
/
விவசாயிகளுக்கு தள்ளுவண்டி வழங்கிய தோட்டக்கலை துறை
ADDED : ஜூலை 23, 2025 02:10 AM

திருத்தணி:காய்கறி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில், தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியங்களில், 950க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி, பழ வகைகளை பயிர் செய்து வருகின்றனர். இவர்களுக்கு, தோட்டக்கலை துறை சார்பில், உரம், விதைகள் மற்றும் நாற்றுகள் இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், காய்கறி பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தோட்டக்கலை துறை சார்பில், விவசாயிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு, நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.