/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீடு புகுந்து ரூ.41,000 2 சவரன் நகை 'ஆட்டை'
/
வீடு புகுந்து ரூ.41,000 2 சவரன் நகை 'ஆட்டை'
ADDED : அக் 14, 2024 06:11 AM
தாம்பரம்: தாம்பரம் அருகே குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையை சேர்ந்தவர் ராம்குமார், 42. இவர், வீட்டின் கீழ் தளத்தில் குளிர்பானம் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 9ம் தேதி தன் சொந்த ஊரான திருச்செந்துாருக்கு குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில், வீட்டின் வெளியே பொருத்தியிருந்த மூன்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை, திருச்செந்துாரில் இருந்தவாறு தனது செல்போனில் பார்த்தார்.
அப்போது, நுாழைவாயிலில் வைத்திருந்த கேமரா திசை மாறி இருந்ததால், கேமராவில் பதிவான காட்சிகளை பின்னோக்கி நகர்த்தி பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து, உள்ளே சென்று வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, ராம்குமார் குரோம்பேட்டை வீட்டில் நேரில் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 சவரன் நகை, 41,000 ரொக்கம் ஆகியவை கொள்ளயடிக்கப்பட்டது தெரிய வந்தது. குரோம்பேட்டை போலீசார் தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர்.