/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீசாருக்கு வாடகைக்கு வீடு
/
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீசாருக்கு வாடகைக்கு வீடு
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீசாருக்கு வாடகைக்கு வீடு
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீசாருக்கு வாடகைக்கு வீடு
ADDED : டிச 14, 2024 09:10 PM
சென்னை:வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், காலியாக உள்ள வீடுகளை வாங்கி, போலீசாருக்கு வாடகைக்கு விடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பணிபுரிகின்றனர். அவர்கள், வெவ்வேறு ஊர்களில் பணிபுரிய வேண்டி உள்ளதால், காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் குடியிருப்புகள் கட்டி, குறைந்த தொகைக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
விண்ணப்பிக்கும் போலீசாருக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இதனால், பல ஆயிரம் போலீசார், அதிகமாக வாடகை கொடுத்து வெளியில் வீடு எடுத்து தங்க வேண்டிய நிலை உள்ளது.
போலீசாரின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடியிருப்புகள் இல்லை. இதனால், 40 சதவீதம் போலீசாருக்கு தான், காவலர் குடியிருப்புகளில் வீடுகள் கிடைக்கின்றன.
இதனால், மாநிலம் முழுதும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், காலியாக உள்ள வீடுகளை அரசே வாங்கி, அதை போலீசாருக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிக்க விரும்பும் போலீசார் விண்ணப்பம் தரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போலீசாருக்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், வீடுகளை வாங்கி வாடகைக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என, காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.