தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அடிப்படை வசதிகள் இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்பு

 அடிப்படை வசதிகள் இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்பு

 அடிப்படை வசதிகள் இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்பு


ADDED : ஜன 28, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 07:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சாலை, மழைநீர் கால்வாய் இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் - ஆவடி புறவழிச்சாலையில், 30 ஆண்டுகளுக்கு முன், வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்பு மனைகள் விற்கப்பட்டன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்ற பாதாள சாக்கடை திட்டம், சாலை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

இந்நிலையில், அங்கு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அனைத்தும், கழிவுநீர் வெளியேற வழியின்றி, உடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கியுள்ளது. மழைநீர் வெளியேற வழியில்லாமல், மழைக்காலத்தில் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது.

தற்போது, வீடுகளை ஒட்டி கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் பரவி வருகிறது.

எனவே, காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us