/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் புதிய மனைப்பிரிவுகள் வீட்டுவசதி வாரியம் திட்டம்
/
திருவள்ளூரில் புதிய மனைப்பிரிவுகள் வீட்டுவசதி வாரியம் திட்டம்
திருவள்ளூரில் புதிய மனைப்பிரிவுகள் வீட்டுவசதி வாரியம் திட்டம்
திருவள்ளூரில் புதிய மனைப்பிரிவுகள் வீட்டுவசதி வாரியம் திட்டம்
ADDED : ஜூலை 15, 2025 09:24 PM
சென்னை:திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில், புதிய மனைப்பிரிவு திட்டங்களை உருவாக்கும் பணிகளை, வீட்டுவசதி வாரியம் துவங்க உள்ளது.
தமிழக வீட்டுவசதி வாரியம், சில ஆண்டுகளாக புதிய மனைப்பிரிவுகளில் கவனம் செலுத்தவில்லை; அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதிலேயே கவனம் செலுத்தி வந்தது.
அவை விற்காததால் வாரிய நிதி முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால், நகர்ப்புற வளர்ச்சி அதிகமுள்ள பகுதிகளில், புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்த, 2020ல் வாரியம் திட்டமிட்டது.
இதற்காக, 10க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. நிதி ஒதுக்கியும், மனைப்பிரிவுகள் உருவாக்கப்படவில்லை.
தற்போது வாரியத்தின் கவனம், புதிய மனைப்பிரிவு திட்டங்களுக்கு திரும்பியுள்ளது.
இதுகுறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முறையான அங்கீகாரம் பெற்று, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே, மனைகளை விற்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டதால், எந்த சிக்கலும் இல்லாத வகையில் புதிய மனைப்பிரிவுகள் உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது, திருவள்ளூர் மாவட்டம், திரூர் பகுதியில், 1.97 ஏக்கர், காக்களூரில், 1.05 ஏக்கர், சேலம் மாவட்டம் எடப்பாடியில், 8.13 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய மனைப்பிரிவுகளை மேம்படுத்த, 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களில், இந்த புதிய மனைபிரிவுகளுக்கான முறையான அறிவிப்புகள் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.