/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொலையாளிகளுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? குன்றத்துார் போலீசார் தீவிர விசாரணை
/
கொலையாளிகளுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? குன்றத்துார் போலீசார் தீவிர விசாரணை
கொலையாளிகளுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? குன்றத்துார் போலீசார் தீவிர விசாரணை
கொலையாளிகளுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? குன்றத்துார் போலீசார் தீவிர விசாரணை
ADDED : பிப் 03, 2024 11:40 PM

குன்றத்துார்: குன்றத்துார் அருகே சிறுகளத்துார், செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில், முண்டமாக மிதந்த ஆண் உடல், டிச., 30ம் தேதி போலீசார் மீட்டனர். தலை, கைகள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக, குன்றத்துார் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர் அணிந்திருந்த 'டி - சர்ட்' அடையாளத்தை வைத்து, சென்னையில் உள்ள ஒரு கடையில் வாங்கிய உறுதி செய்யப்பட்டது.
அதை அடிப்படையாக வைத்து, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன், 33, என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து விசாரணை வேகமெடுத்தது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக பூமிநாதன் பணியாற்றி வந்துள்ளார். அவரை, சக ஊழியரான சிறுகளத்துார், சரஸ்வதி நகரைச் சேர்ந்த திலீப்குமார், 34, என்பவர், தனது நண்பரான ராமாபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 22, என்பவருடன் சேர்ந்து, கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், கள்ளக்காதல் விவகாரத்தில் இக்கொலை நடந்ததும் தெரியவந்தது.
இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பூமிநாதனை கொலை செய்ய முடிவு செய்த திலீப்குமார், டிச., 27ம் தேதி அவரை மிரட்டி, தன் இருசக்கர வாகனத்தின் நடுவில் அமர வைத்து ஓட்டி சென்றுள்ளார். அப்போது, திலீப்குமார் வாகனத்தில் இருந்து இறங்க முயற்சித்தபோது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, பூமிநாதன் தலையில் திலீப்குமார் சுட்டுள்ளார்.
இதில், பூமிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் அகற்றுவதற்காக, 12 கி.மீ., துாரம் வாகனத்திலேயே அமரவைத்து, சிறுகளத்துாரில் உள்ள தன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பூமிநாதனின், கை, கால், தலை ஆகியவற்றை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் பின்புறத்தில் இருந்த கல்லை உடலில் கட்டி, செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியுள்ளார்.
தலை மற்றும் கைகளை, வண்டலுார் ஏரியில் வீசியுள்ளார். இச்சம்பவத்தில், திலீப்குமாரிடம் இருந்து, இரண்டு துப்பாக்கிகள், 17 தோட்டாக்கள் மற்றும் இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், திலீப்குமார் ராஜஸ்தானில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை வாங்கி வந்து, அவரது நண்பரான வினோத் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது; வேறு ஏதேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதற்காக துப்பாக்கிகளை வாங்கி வைத்திருந்தாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை சம்பவம் நடந்த நாளில், திலீப்குமார் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டிருந்ததும், அப்படியிருந்தும் பூமிநாதனை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி ஏரியில் வீசியுள்ளார். மேலும், யாருக்கும் சந்தேகம் வராதபடி, ஒன்றும் தெரியாதது போல், சபரிமலைக்கு சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.