ADDED : பிப் 01, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: ஆதிதிராவிடர் நல துறை சார்பில் நடந்த மனிதநேய வார நிறைவு விழாவில், மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழா நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்ட, பேச்சு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
