ADDED : செப் 03, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை, செப். 4–
வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என, அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதீன்கான், 40. இவரது மனைவி அமீனா, 37. மதீன்கான், பெரியபாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 1ம் தேதி வேலைக்கு சென்ற மதீன்கான், இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அமீனா கொடுத்த புகாரின்படி, பெரியபாளையம் போலீசார், காணாமல் போன மதீன்கானை தேடி வருகின்றனர்.
