/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கடை சாலை இப்படி இருந்தா எப்படி போய் பொருட்கள் வாங்குவது?
/
ரேஷன் கடை சாலை இப்படி இருந்தா எப்படி போய் பொருட்கள் வாங்குவது?
ரேஷன் கடை சாலை இப்படி இருந்தா எப்படி போய் பொருட்கள் வாங்குவது?
ரேஷன் கடை சாலை இப்படி இருந்தா எப்படி போய் பொருட்கள் வாங்குவது?
ADDED : டிச 05, 2025 05:19 AM

திருவாலங்காடு: சின்னமண்டலியில் ரேஷன் கடைக்கு செல்லும் சாலை சகதியாக மாறியுள்ளதால், எப்படி சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருவோம் என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்ல ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ரேஷன் கடைக்கு செல்லும் சாலை மண் பாதையாக உள்ளது. இதனால் சாதாரண மழைக்கே அங்கு சகதியாக காட்சியளிக்கிறது. இதனால் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்வது எப்படி என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனவே ரேஷன்கடை சாலையை சிமென்ட் கல் சாலையாக மாற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.