/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கள்ளச்சாராயம் பறிமுதல் காய்ச்சியோர் 'எஸ்கேப்'
/
கள்ளச்சாராயம் பறிமுதல் காய்ச்சியோர் 'எஸ்கேப்'
ADDED : மே 17, 2025 09:04 PM
திருத்தணி:திருத்தணி - நகரி தேசிய நெடுஞ்சாலையில், தமிழக - ஆந்திர மாநில எல்லையான, சித்துார் மாவட்டம் தடுக்குப்பேட்டை மங்களம் பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசா பெருமாள் உத்தரவின்படி, நேற்று ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் மற்றும் நகரி மதுவிலக்கு போலீசார் இணைந்து, மங்களம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வயல்வெளியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். தொடர்ந்து, நகரி போலீசார், 50 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தும், 10 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.