/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பால பணி நடக்கும் இடத்தில் ஒளிரும் எச்சரிக்கை பலகை
/
பால பணி நடக்கும் இடத்தில் ஒளிரும் எச்சரிக்கை பலகை
ADDED : மே 11, 2025 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து பாத்தப்பாளையம் வழியாக ஈகுவார்பாளையம் வரையிலான சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
அதற்காக, சிப்காட் எல்லை முடிந்து பாத்தப்பாளையம் கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பாலப்பணிகள் நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால், இரவு நேரத்தில் விபத்து அபாயம் அதிகரித்து, வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, பாலப்பணிகள் நடக்கும் இடத்தில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகளை, மாநில நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ளனர்.

