/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்களுடன் முதல்வர் முகாம் 4 பேருக்கு உடனடி சான்று
/
மக்களுடன் முதல்வர் முகாம் 4 பேருக்கு உடனடி சான்று
ADDED : ஜன 24, 2024 12:34 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திட்டம் 10 முதல் 18 வரை உள்ள வார்டுகளுக்கு நடந்தது.
நகர்மன்ற தலைவர் உதயமலர்பாண்டியன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிச்சந்திரன், ஆணையர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதில், கண்பார்வையற்ற பெண் ஒருவர், கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் 3 பேர் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனர்.
அடுத்த அரை மணி நேரத்தில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ்களை திருவள்ளூர் தி.மு.க.- எம்.எல்.ஏ.,ராஜேந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

