/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆண்டார்மடத்தில் சேதமான தரைப்பாலம் சீரமைக்காததால் கிராமவாசிகள் தவிப்பு
/
ஆண்டார்மடத்தில் சேதமான தரைப்பாலம் சீரமைக்காததால் கிராமவாசிகள் தவிப்பு
ஆண்டார்மடத்தில் சேதமான தரைப்பாலம் சீரமைக்காததால் கிராமவாசிகள் தவிப்பு
ஆண்டார்மடத்தில் சேதமான தரைப்பாலம் சீரமைக்காததால் கிராமவாசிகள் தவிப்பு
ADDED : பிப் 22, 2024 10:50 PM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே, காட்டூர் - பழவேற்காடு சாலையில், சிமென்ட் உருளைகள் பதிக்கப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது.
ஆண்டார்டம், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் மருத்துவம் மற்றும் அத்யவாசிய தேவைகளுக்கு பழவேற்காடு மற்றும் பொன்னேரி செல்ல இந்த தரைப்பாலத்தின் வழியாக பயணித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 'மிக்ஜாம்' புயல் மழையின் போது, ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆண்டார்மடம் கிராமத்தில் சாலை, 100 மீ., தொலைவிற்கு அரித்து செல்லப்பட்டது.
அதில் தரைப்பாலத்தில் இருந்த சிமென்ட் உருளைகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. புயல் மழை முடிந்து, இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில், ஆற்றில் நீர்வரத்து குறைந்து உள்ளது.
சேதம் அடைந்த சாலை மற்றும் தரைப்பாலம் இதுவரை சீரமைக்கப்படாமல் அதே நிலையில் உள்ளது.
இதனால் கிராமவாசிகள், பள்ளி மாணவர்கள், பழவேற்காடு வழியாக காட்டுப்பள்ளியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு செல்பவர்கள், விவசாயிகள் பெரிதும் தவிப்பிற்ற்கு ஆளாகி உள்ளனர்.
இவர்கள், 10 கி.மீ., தொலைவு சுற்றிக்கொண்டு பழவேற்காடு மற்றும் பொன்னேரி பகுதிக்கு சென்று வருகின்றனர். நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள் மீது கிராமவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து கிராமவாசிகள் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு ஆண்டும் இதே சிரமம் தொடர்வதால், ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதிலும் அக்கறை காட்டவில்லை.
ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தால் நெடுஞ்சாலைத் துறையிடம் சாலையை ஒப்படைத்து விட்டோம் எனவும், நெடுஞ்சாலைத்துறையிடம் கேட்டால், அது தொடர்பாக எந்த அரசாணையும் தங்களுக்கு வரவில்லை எனவும் கூறி இரு துறையினரும் அலைகழிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.