sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமண மண்டபங்களில் பரிசு பொருள் உணவு வழங்கினால் தகவல் அளிக்கவும்: கலெக்டர் எச்சரிக்கை

/

திருமண மண்டபங்களில் பரிசு பொருள் உணவு வழங்கினால் தகவல் அளிக்கவும்: கலெக்டர் எச்சரிக்கை

திருமண மண்டபங்களில் பரிசு பொருள் உணவு வழங்கினால் தகவல் அளிக்கவும்: கலெக்டர் எச்சரிக்கை

திருமண மண்டபங்களில் பரிசு பொருள் உணவு வழங்கினால் தகவல் அளிக்கவும்: கலெக்டர் எச்சரிக்கை


ADDED : மார் 19, 2024 08:45 PM

Google News

ADDED : மார் 19, 2024 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருமண மண்டபம், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் நகை அடகு தொழில் புரிவோருக்கான தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:

திருமண மண்டபங்களில், வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதிக்க கூடாது. திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள் தவிர அரசியல் தொடர்பு கூட்டம் நடைபெற பதிவு செய்யப்பட்டால், அதன் விபரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

சுபநிகழ்வு என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருள், புடவை வேட்டி மற்றும் பணம் கொடுத்தாலும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், சுபநிகழ்வு என்ற பெயரில் மக்களை கூட்டி உணவு வழங்குதல், அரசியல் பேனர் வைத்து, ஓட்டு சேகரித்தாலும், அதையும் தெரிவிக்க வேண்டும்.

நகை அடகு தொழில் புரிவோர், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், வாக்காளருக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லை வழங்க கூடாது. மீறினால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை முகவர்களால் மொத்தமாக மீட்கப்பட்டு, வாக்காளர்களுக்கு திருப்பி வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.

மொத்தமாக அடகு நகைகளை திருப்ப எவரேனும் முற்படின் அல்லது சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் வந்தாலோ கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, 1800-59 9-5669, 044 - 2766 0641 மற்றும் 'வாட்ஸாப்' எண்: 84385 38757 ஆகியவற்றில் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை தங்களது நிறுவனத்தை அணுகி வெவ்வேறு அடகு நகைகளை திருப்ப முற்பட்டாலும், தகவல் தெரிவிக்கவும்.

அடகு வைத்த நகைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் மீட்கப்பட்டால், அவை குறித்த விபரங்களை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் விதிமுறை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால், உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் - வளர்ச்சி, சுகபுத்ரா, பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வதஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us