/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னம்மாபேட்டையில் ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
/
சின்னம்மாபேட்டையில் ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
சின்னம்மாபேட்டையில் ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
சின்னம்மாபேட்டையில் ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
ADDED : பிப் 16, 2024 10:03 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி அலுவலக கட்டடம் பழுதடைந்தது.
இதனால் ஊராட்சி சம்பந்தமான கோப்புகளை பராமரிப்பது, மற்றும் வீட்டு வரி, குழாய் வரி உள்ளிட்ட வரிகளை கட்ட வருவோர் அச்சமடைந்தனர்.
எனவே இந்த ஊராட்சிகளில் பழுதடைந்த ஊராட்சி கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 25.5 லட்ச ரூபாய் மதிப்பில் ஊராட்சி கட்டடம் கட்டப்பட்டது.
அதேபோன்று சின்னம்மாபேட்டை பூமாலை நகரில், திருவள்ளூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
இந்த இரண்டு கட்டடத்தையும், திருவள்ளூர் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., ராஜேந்திரன் நேற்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இதில் திருவாலங்காடு ஒன்றிய துணை சேர்மன் சுஜாதா மகாலிங்கம், சின்னம்மாபேட்டை ஊராட்சி தலைவர் சரண்யா நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.