தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குரங்குகள் தொல்லை அதிகரிப்பு;பொன்னேரியில் மக்கள் பரிதவிப்பு

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு;பொன்னேரியில் மக்கள் பரிதவிப்பு

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு;பொன்னேரியில் மக்கள் பரிதவிப்பு


UPDATED : மே 24, 2026 04:14 PM

ADDED : மே 24, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 04:14 PM ADDED : மே 24, 2026 04:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னேரி: பொன்னேரியில் குடியிருப்பு பகுதிகள், ரயில் நிலைய நடைமேடைகளில் சுற்றித்திரியும் குரங்குகளால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் பகுதியில் குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இவை, வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள உணவு பொருட்களை அள்ளி செல்கின்றன. வீட்டின் மாடியில் உலர வைக்கப்படும் தானியங்கள், வற்றல் உள்ளிட்டவற்றை குரங்குகள் உண்பதுடன், அவற்றை கடித்து வீணாக்குகின்றன.

இதனால், குடியிருப்பு மக்கள் வீட்டின் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். அதேபோல், பொன்னேரி ரயில் நிலைய மேடைகளிலும் குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. சிறு வியாபாரிகள் ரயிலில் விற்பனை செய்வதற்கு வைத்திருக்கும் பழம், பிஸ்கட் உள்ளிட்டவைகளை பறித்து செல்கின்றன. இதனால், ரயில் பயணியரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, வனத்துறை உதவியுடன் உள்ளாட்சி அமைப்புகள், பொன்னேரியில் சுற்றித் திரியும் குரங்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us