/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையோர கடைகள் அதிகரிப்பு
/
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையோர கடைகள் அதிகரிப்பு
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையோர கடைகள் அதிகரிப்பு
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையோர கடைகள் அதிகரிப்பு
ADDED : பிப் 01, 2025 12:57 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், வெள்ளாத்துார் கூட்டு சாலையை ஒட்டி, ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது.
இதே வளாகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகமும் உள்ளது. மேலும், இந்த பகுதியில் தொழிற்பேட்டை, வட்டார கல்வி அலுவலகம், காவல் நிலையம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் என, ஒன்றியத்தின் முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால், காலை முதல் மாலை வரை, ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். வட்டாட்சியர் அலுவலக வாயில் அருகே, நெடுஞ்சாலை துறைக்கு உரிய இடம், புதர் மண்டிக்கிடக்கிறது.
இந்த இடத்தை சமன் செய்து, பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சாலையோரத்தில் நடைபாதை கடைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடைகளின் விளம்பர பதாகைகளும், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால், இங்குள்ள அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பகுதிவாசிகளின் நலன் கருதி, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அடிப்படை வசதிகளுடன் நிழற்குடை கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.