/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் கோடையில் வீணாகும் குடிநீர்
/
ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் கோடையில் வீணாகும் குடிநீர்
ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் கோடையில் வீணாகும் குடிநீர்
ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் கோடையில் வீணாகும் குடிநீர்
ADDED : மார் 14, 2024 10:24 PM

செங்குன்றம்:புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி, அத்திவாக்கம் கோட்டூரில் உள்ள சத்துணவுக் கூடம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதில், ஊராட்சிக்கான நீரேற்றல் மற்றும் பகிர்வு பணி உரிய பராமரிப்பின்றி உள்ளது.
அதனால், கடந்த சில நாட்களாக, நாள் முழுதும் குடிநீர் வீணாகி, அருகில் உள்ள கால்வாயில் பாய்கிறது. இதில், சிறுவர்கள் குளிக்கச் சென்றால், எதிர்பாராத விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் பலமுறை புகார் அளித்தும், ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது.
மேலும், கோடையில் அத்தியாவசிய தேவைக்காக சேமித்து பயன்படுத்த வேண்டிய குடிநீர் வீணாவதால், கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, சேதமடைந்த குழாயை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

