/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனி தேர்வர்கள் சான்றிதழ் பெற ஜனவரி 31 வரை வாய்ப்பு
/
தனி தேர்வர்கள் சான்றிதழ் பெற ஜனவரி 31 வரை வாய்ப்பு
தனி தேர்வர்கள் சான்றிதழ் பெற ஜனவரி 31 வரை வாய்ப்பு
தனி தேர்வர்கள் சான்றிதழ் பெற ஜனவரி 31 வரை வாய்ப்பு
ADDED : நவ 30, 2024 02:12 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் தனித்தேர்வு எழுதி சான்றிதழ் பெறாதோர், ஜன., 31க்குள் பெற்றுக் கொள்ளலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் தனித்தேர்வு மையங்களில், ஜூன் 2012 - செப்., 2020 வரை, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பின், மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்பட்டது.
எனினும் சிலர், தற்போது வரை சான்றிதழ் பெறாமல், முதன்மை கல்வி அலுவலகத்தில் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளது.
தேர்வு துறை விதிமுறைப்படி தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, இரண்டாண்டு கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.
அதன்படி, நீண்ட நாட்களாக தேக்கமடைந்துள்ள சான்றிதழ்களை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, இதுவரை மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனி தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பாக, 2025 ஜன., 31க்குள் பெற்றுக் கொள்ளலாம்.
சான்றிதழை பெற, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலக வளாகம், திருவள்ளூர் - -602001 என்ற முகவரியிலும், 044 - 2766 6004 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.