/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பை ருசி பார்க்கும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
கரும்பை ருசி பார்க்கும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
கரும்பை ருசி பார்க்கும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
கரும்பை ருசி பார்க்கும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 21, 2025 03:48 AM

திருவாலங்காடு: திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.
நடப்பாண்டுக்கான அரவை இலக்காக 2 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டு அரவை கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது. அரவைக்கு வாகனங்களில் வரும் கரும்புகள் அரைக்கப்படும்.
இந்நிலையில் கரும்பு வரத்து காரணமாக அதிகப்படியான வாகனங்களில் கரும்பு வந்துள்ளதால் கனகம்மாசத்திரம் -- தக்கோலம் நெடுஞ்சாலை, திருவள்ளூர் ----- அரக்கோணம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட சாலையில் கரும்புடன் டிராக்டர்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
இதை அவ்வழியாக செல்லும் கால்நடைகள் டிராக்டரில் உள்ள கரும்பை ருசி பார்த்து செல்கின்றன.
அவை இறுக கட்டப்பட்ட கரும்புகளை இழுப்பதால் அவை டிராக்டரில் இருந்து சரிந்து சாலையில் விழுகின்றன.
மேலும் கால்நடைகள் அதிகளவில் கரும்பை ருசி பார்க்க சாலையில் குவிவதால் கால்நடைகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதனால் அவ்வழி யாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், வாகனங்கள் சர்க்கரை ஆலை வளாகத்தில் மட்டும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

