/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஈச்சம்பாடி கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்
/
ஈச்சம்பாடி கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்
ADDED : நவ 08, 2024 08:39 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி கிராமம், கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் மேற்கில் விஜயராகவபெருமாள் கோவில் உள்ளது.
பழமையான இந்த கோவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆகம விதிகளின் படி புனரமைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து நித்திய பூஜை, தனுர்மாத உற்சவம் உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன. மூன்றாம் ஆண்டாக பவித்ரோற்சவம் நேற்று துவங்கியது.
நேற்று மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம், பவித்ர பிரதிஷ்டை நடைபெற்றது. இன்று மாலை 5:00 மணிக்கு வீதியுலாவும், கும்ப ஆராததனையும் நடைபெறும்.
நாளை 10ம் தேதி காலை 11:00 மணிக்கு பவித்ரோற்சாவம், வேதபிரபந்தம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஈச்சம்பாடி விஜயராகவ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.