/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கருவூல துறையில் தேர்வான 94 பேருக்கு பயிற்சி துவக்கம்
/
கருவூல துறையில் தேர்வான 94 பேருக்கு பயிற்சி துவக்கம்
கருவூல துறையில் தேர்வான 94 பேருக்கு பயிற்சி துவக்கம்
கருவூல துறையில் தேர்வான 94 பேருக்கு பயிற்சி துவக்கம்
ADDED : அக் 19, 2024 08:16 PM
திருவள்ளூர்:அரசு கருவூல கணக்கு துறையில் புதிதாக தேர்வானவர்களுக்கு பயிற்சி துவங்கியது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அரசு கருவூல கணக்கு துறைக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், 94 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான பயிற்சி வகுப்பு, நேற்று முன்தினம் பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் துவங்கியது. துணை கலெக்டர்- பயிற்சி, ஆயுஷ் குப்தா துவக்கி வைத்தார். வரும், டிச.5 வரை நடக்கிறது. நிகழ்ச்சியில், கருவூல கணக்கு துறை சென்னை மண்டல இணை இயக்குனர் முத்துராமன், புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட இணை இயக்குனர் புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.