/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டயர்களில் காற்றை இறக்கி நுாதன முறையில் ஆர்ப்பாட்டம்
/
டயர்களில் காற்றை இறக்கி நுாதன முறையில் ஆர்ப்பாட்டம்
டயர்களில் காற்றை இறக்கி நுாதன முறையில் ஆர்ப்பாட்டம்
டயர்களில் காற்றை இறக்கி நுாதன முறையில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 25, 2025 03:14 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி, டயர்களில் காற்றை இறக்கி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் நுாதன முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்க வேண்டும் என, கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் கழிவுநீர் கலந்து, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட விவகாரம், கழிவுநீர் டேங்கர் லாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி, 3 நாட்களாக கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காடு பகுதியில், அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று அந்த வாகனங்களின் டயர்களில் காற்றை இறக்கி, நுாதன போராட்டம் மேற்கொண்டனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும் வரை, வாகனங்கள் இதே இடத்தில் நிற்கும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

